பிரதமருக்கு சசிகலா நன்றி கடிதம்

 
Published : Dec 20, 2016, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
பிரதமருக்கு சசிகலா நன்றி கடிதம்

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதற்காக, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்து.

இதைதொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி உள்பட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நடிகர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மறைந்த முதல்வர் ஜெ.வின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், கவர்னர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுத உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!