ஜெயிலுக்கு வெளியே உரிமையோடு வந்த நடராஜன்... குவிந்த சொந்தங்கள் - சசிகலா ஜெயிலில் அடைப்பு

 
Published : Feb 15, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஜெயிலுக்கு வெளியே உரிமையோடு வந்த நடராஜன்... குவிந்த சொந்தங்கள் - சசிகலா ஜெயிலில் அடைப்பு

சுருக்கம்

பெங்களுரு பரப்பன அக்ரஹாரம் மீண்டும் பரபரப்பாக உள்ளது.

2015ஆம் ஆண்டு நீதிபதி நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா அளித்த முக்கியமான தீர்ப்பில் ஜெயலலிதா,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் தள்ளப்பட்டனர்.

அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததாலும் எப்போதும் அவர் ஒரு மாஸ் லீடர் என்பதாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அப்பகுதியில் தினந்தோறும் கூடியது.

தற்போது அந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஒரு 200 பேர் வரை அப்பகுதியில் கூடியுள்ளனர்.

இது ஆதரவு கூட்டமா எதிர்ப்பாளர் கூட்டமா என தெரியவில்லை.

இந்த களேபரங்களுக்கு இடையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு சசிகலா தனது மனைவி என்ற உரிமையோடு வெளிப்படையாக வந்துள்ளார் அவரது கணவர் நடராஜன்.

சசிகலா நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்பு சரணடைந்த பின்பு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்கு முன்னதாக அப்பகுதிக்கு வருகை தந்த நடராஜனுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் வந்தார்.

ஜெயலலிதாவின் கெடுபிடிகள் மற்றும் உத்தரவு காரணமாக சசிகலா இருக்கும் பக்கம் கூட திரும்பி பார்க்காமல் இருந்து வந்த நடராஜன் வெளிப்படையாக துணை சபாநாயகருடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..