திரும்ப திரும்ப பேட்டியளிக்கும் இன்பதுரை - வேறு எம்.எல்.ஏக்கள் இல்லையா?

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
திரும்ப திரும்ப பேட்டியளிக்கும் இன்பதுரை - வேறு எம்.எல்.ஏக்கள் இல்லையா?

சுருக்கம்

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைத்தது பற்றி  பத்திரிக்கையாளர்களுக்கு தாராபுரம் எம்.எல்.ஏ இன்பதுரையும் பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பிறை தமிழ்செல்வனும் மட்டுமே திரும்ப திரும்ப பேட்டி அழிகின்றனர்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் பத்திரிக்கையாளர்கள் சென்றால் எம்.எல்.ஏக்கள் தாராபுரம் இன்பதுரையும் பெரம்பலூர் இளம்பிறை தமிழ்செல்வனும் மட்டுமே பேட்டி அளிக்கின்றனர்.

அவர்கள் பேட்டி அளிக்கும்போது மற்ற எம்.எல்.ஏக்களை அருகில் விடுவதில்லை. 125 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் பேட்டி அழிப்பது என்னவோ சில அமைச்சர்கள் சில எம்.எல்.ஏக்கள் மட்டுமே.

நேற்றுவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இன்பதுரை பேட்டியளித்தனர். இன்று எம்.எல்.ஏக்கள் இன்பதுரை, இளம்பிறை தமிழ்செல்வன் மட்டுமே பேட்டியளித்தனர்.  

கூடுதலாக அமைச்சர் சரோஜாவை பெண் எம்.எல்.ஏக்களை அருகில் வைத்துகொண்டு பேட்டியளிக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு பெரும்பாலும் எம்.எல்.ஏ இன்பதுரை மட்டுமே பேட்டியளித்து வருகிறார். அவரும் செய்தியாளர்கள் கேள்விக்கு சரிவர பதில் அளிப்பதில்லை.

இன்று கூடுதலாக தங்களது உரிமைகளை நிலைநாட்ட சபாநாயகரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.

பேட்டியளிக்க செல்லும்போது ஒருசிலர் மட்டுமே உடன் இருக்க அனுமதியளிக்கபட்டது. 

PREV
click me!

Recommended Stories

1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!