
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதாவிற்கு 100 கொடிரூபாயும் மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதம் என தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து மேல்முறையீடு செய்த ஜெயலலிதா தரப்பு வழக்கில், நீதிபதி குமாரசாமி அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதுகுறித்த வழக்கின் இறுதி விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா பத்துகோடி ரூபாய் அபராதாம் ஆகியவற்றை உறுதி செய்தனர்.
இதையடுத்து இன்று சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் சென்னையில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்னிலையில் சசிகலாவும், இளவரசியும் சரணடைந்தனர்.