கழகமும் நீங்களே.. எங்கள் காப்பகமும் நீங்களே.. சின்னம்மாவை அதரித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போஸ்டர்.

Published : Jul 02, 2021, 09:38 AM ISTUpdated : Jul 02, 2021, 09:42 AM IST
கழகமும் நீங்களே.. எங்கள் காப்பகமும் நீங்களே.. சின்னம்மாவை அதரித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போஸ்டர்.

சுருக்கம்

கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்களே...! என அ.தி.மு.க அலுவலகம் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்களே...! என அ.தி.மு.க அலுவலகம் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். சிறையிலிருந்து விடுதலையடைந்த அவர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

அதனையடுத்து, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்று பெற்று அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. அதனையடுத்து, தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகிவருகிறது. அது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் வகையில் அந்த ஆடோயோக்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை இபிஎஸ், ஓபிஎஸ்சால் கட்சியிலிந்து நீக்கப்பட்டனர். 

அதேபோல், சசிகலாவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சசிகலா தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேசிவருகிறார். மேலும், அந்த ஆடியோ விவரங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ச சிகலாவை வாழ்த்தும் வகையில் கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்களே...! என  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!