அதிரடி நடவடிக்கையின் மூலம் தமிழக அரசின் வாயை அடைத்த மத்திய அரசு.. சென்னை வந்த 6 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகள்

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2021, 9:23 AM IST
Highlights

அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு மட்டும் 48000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு , பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 94000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை வந்த 6 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகளையும் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதன் முழுவிவரம்: தமிழகத்தில் படிப்படியாக கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பட்டு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை வந்த 6 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசியும், தமிழகத்தில் உள்ள 45 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு மட்டும் 48000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு , பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 94000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 79,000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 75000 கோவிஷூல்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 66,500 கோவிஷூல்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், சிவகாசி மாவட்டங்களுக்கு 66,500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று சென்னை வந்த 6 லட்சம் டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகள் தமிழகத்தில் உள்ள 45 மாவட்டங்களுக்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

click me!