சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆப்பு...!!

First Published Feb 12, 2017, 12:32 PM IST
Highlights


அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தூக்கிய போர்க்கொடி காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து சசிகலா ஓபிஎஸ் இருவருக்கும் இடையே  நடைபெறும் அதிகார சண்டை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்த சசிகலா, ஓபிஎஸ் என இருவருமே தங்களுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் தங்களை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலா தரப்பினர்  125 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை சென்னை கூவத்துர் நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்த வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு பெரிய அளவிலான பணம் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாக பல தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இத்தகைய வசதிகள் அவர்களுக்கு சட்டசிக்கலை உருவாக்கும் என கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் அரசு சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர். அவர் மற்றவர்களிடமிருந்து சொகுசு பேருந்துப்பயணம், நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கும் வசதி, பணப் பரிமாற்றம் போன்றவற்றை பெற்றால் அது அரசு விதிகளுக்கு முரணானது என கூறப்படுகிறது.

முன்பு ஒரு முறை ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வழக்கில் இதே போன்று சொகுசு பங்களா உள்ளிட்ட வசதிகள் பெற்ற 15 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்ற  நிலை தமிழகத்தில் நிலவி வருவதால் சசிகலா ஆதரவாக கூவத்தூர் நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இதேபோன்று பதவி இழக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

click me!