இந்திராவுக்கு அடுத்த இரும்பு பெண்மணி நம் அம்மா…” – சசிகலா உருக்கம்

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 02:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
இந்திராவுக்கு அடுத்த இரும்பு பெண்மணி நம் அம்மா…” – சசிகலா உருக்கம்

சுருக்கம்

 

அம்மாவுக்கு என்று ஆசைகள் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. இந்த இயக்கம் வாழ வேண்டும். அது மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அது இதுவரை நடந்து வந்துள்ளது. இனியும் அது, நடக்கும்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்து இந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் இயக்கம் மக்களுக்காக இயங்கும் என்று நம் அரசியல் எதிரிகளுக்கு முன்னால், நம் அம்மா சிங்கம்போல் கர்ஜித்தார். அது, அவர்களுக்கு மட்டுமல்ல. அம்மா இந்த உலகத்துக்கு சொன்ன செய்திதான் அது. எத்தனையோ போராட்டம், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்ற தாழ்வுகள் எல்லாவற்றையும் அம்மா வென்று, உறுதியோடு நின்றார்.

உங்கள் செயல்பாடுகளை, பண்புகளை அம்மா நன்கு அறிந்து இருந்தார். உங்கள் செயல்பாடுகள், பண்புகள், விசுவாசத்தை அம்மா விரும்பினார். உங்கள் விசுவாசங்களை கூடுதலாக எதிர்பார்த்தார். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்தார்.

அந்த எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றவாறு, ஒவ்வொருவரும் அவரது எண்ணத்தை நிலை நிறுத்தவேண்டும். அடிப்படையில் துணிச்சல் மிகுந்தவர் நம் அம்மா. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் இந்தியாவில் அன்று இந்திராவை தவிர ஒரு தலைவர் இல்லை என்ற நிலையில், அம்மாவின் அரசியல் பிரவேசம் அமைந்தது.

பெண் இனத்தால் முடியும், பெண்களால் பெரும் புகழை எட்ட முடியும் என்ற புரட்சிகர வரலாற்றை அமைக்க அம்மாவால் முடிந்தது. அற்கான ஊக்க சக்தியே தாய்மார்கள்தான் என்பதை எண்ணி உலகமே வியந்தது. இன்றும் ஒரு பெண்ணாக, அம்மாவுக்கு பிறகு கட்சியில் கடையாற்ற முன் வந்துள்ளேன். அதற்கு காரணம், கோடானுக்கோடி தாய்மார்கள், சகோர, சகோதரிகள், துணையாகும்.

பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம், புரட்சித்தலைவரின் கனிவு ஒருங்கே பெற்ற போர் குணம் பெற்றவர் அம்மா. அவரிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் பாத தடத்தை வேரென பின் பற்றுவோம்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு