எனது எஞ்சிய வாழ்நாளை அம்மா கட்டி காத்த இயக்கத்திற்கு அர்பணிப்பேன் – சசிகலா உருக்கம்

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
எனது எஞ்சிய வாழ்நாளை அம்மா கட்டி காத்த இயக்கத்திற்கு அர்பணிப்பேன் – சசிகலா உருக்கம்

சுருக்கம்

தனது எஞ்சிய நாட்களை அம்மா கட்டிகாத்த இயக்கத்திற்காகவும்கோடானுகோடி தொண்டர்களுக்காக அர்ப்பணிக்க உறுதிஎடுத்துள்ளதாக சசிகலா கூறினார் தலைமை கழக நிர்வாகிகளே, அமைச்சர்களே, மாவட்ட நிர்வாகிகளே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே  கழக உடன் பிறப்புகளே,

என் உயிரில் நான் சுமக்கின்ற அம்மா, எந்நாளும், நாடும், மக்களும், உலகமே வியக்கும் வெற்றிகளை தந்த, இன்று நம்மிடையே இல்லாத கழகம் தான் தமிழகத்தை ஆளும், நமக்கெல்லாம் அடையாளமாய், இயக்கத்தின் உருவமாய், இந்த இயக்கமாய், எனக்கு எல்லாமுமாய் (கண் கலங்கியபடி) எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே எல்லாமுமாய் இருந்து இதய தெய்வம், புரட்சித்தலைவி அவருக்கு பிறகு, தானிருந்து வழிநடத்திய இந்த மாபெரும் இயக்கத்துக்கு என்னை பொது செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்த்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அம்மாவின் வழியில் கழக பணியாற்ற எனக்க வாய்ப்பளித்தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆயிரம் ஆயிரம் கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 33 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ பொதுக்கூட்டங்களில் நான் அம்மாவோடு கலந்து கொண்டிருக்கிறேன்.ஆனால், இன்று (கண் கலங்குகிறார்) அவர் இல்லாமல், பேசும் சூழல் உருவாகியுள்ளது. உங்கள் அன்பு கட்டளையை ஏற்கும் நான், கனவிலும் நினைக்காத, கற்பனை செய்தும் பார்க்க முடியாத, தலையில் இடி வந்து விழுந்ததுபோல், நன்கு தேறி வந்த நம் அம்மா, தம்மை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர். நம்மையெல்லாம் கைவிட்டு மறைந்துவிட்டார்.

நம் அம்மவிற்கு இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ, அம்மாதான் வாழ்க்கை (அழுகிறார்). இறைவன் தன் அன்பு மகளை, அழைத்து கொண்டுவிட்டார். 75 நாட்கள் எவ்வளவோ சிகிச்சைகள், மருத்துவர்கள், கேடானுகோடி தொண்டர்கள், ஆன்மீக பிரார்த்தனைகள் மூலம் நன்றாக தேறி வந்தார் என்ற நம்பி வந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர், பிசியோ தெரபி சிகிச்சை என இன்னும் சற்று நாளில் அம்மா பூரணமாக குணமாகி பூரண நிலவாக இல்லம் அழைத்து வந்துவிடலாம் என்று நம்பிய அனைவரையும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு தேவதையில்லாத அரசியல் மாடம், என்ற நிலை. எனக்கோ, அனைத்தையும் இழந்துவிட்ட நிலை. சில நிமிடம் மட்டுமே அம்மாவுடன் இருந்தவர்கள், சில வினாடிகள் மட்டுமே அம்மாவுடன் பேசியவர்கள், சில நாட்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள் அவர்களே இவ்வளவு துடிக்கிறார்கள் என்றால், 33 ஆண்டுகள் அம்மாவுடன் கழித்துவிட்ட எனக்கு பிரிவின் துயரம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியவில்லை.33 ஆண்டுகள், அம்மாவுடன் பயணித்தேன்.

அப்போது யாரும் நினைத்து கூட பார்த்து இருக்க முடியாது. அம்மா என்ற சொல், இவ்வளவு தூரம் அனைவரையும் ஈர்க்கும் என்பதை. அக்கா கோட்டைக்கு கிளம்பிடீங்களா, அக்கா மதியம் சாப்பிட என்ன வேண்டும் என அனுதினமும் ஒவ்வொரு நிமிடமும்அக்காவின் வாழ்க்கையை பற்றியே சிந்தித்தவள்நான்.எனக்கு எனக்கு 62 வயது ஆகிறது. கடந்த 33 ஆண்டுகளாக, எனது 29 வயது முதல் இதயதெய்வம் அம்மவோடுதான் இருக்கிறேன்.

அவரை விட்டு பிரிந்து இருந்த நாட்கள், மிகமிக குறைவு. அவைகள் நாட்கள் என சொல்வதைவிட, அந்த கம்பீரமான குரலை கேட்கமுடியாத காலகட்டம் என்றே சொல்லமுடியும்.அம்மாவின் நினைவோடு, வாழும் நான், எஞ்சி இருக்கும் நாட்களை, அம்மா கட்டி காத்த கழகத்துக்காக கோடானுக்கோடி கழக கண்மணிகளுக்காக வாழ வேண்டும் என உறுதி எடுக்க வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
பதவியேற்ற முதல் நாளே ராஜினாமா செய்த விஜய்..! திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத் தேர்தல்..