ஒன்றரைக் கோடி தொண்டர்களை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன்…ஜெயலதாவின் ஆன்மா சொன்னதாக சசிகலா பேச்சு…

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஒன்றரைக் கோடி தொண்டர்களை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன்…ஜெயலதாவின் ஆன்மா சொன்னதாக சசிகலா பேச்சு…

சுருக்கம்

ஒன்றரைக் கோடி தொண்டர்களை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன்…ஜெயலதாவின் ஆன்மா சொன்னதாக சசிகலா பேச்சு…

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா இன்று தலைமைக் கழக அலுவலத்திற்கு வந்து புதிய பொதுச் செயலாளராக பதிவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடையே பேசினார். முதன்முதலாக அவரது குரலைக் கேட்க தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா அதே போன்னு எனக்குஎல்லாமுமாய் இருந்தவர் ஜெயலலிதா என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நன்கு உடல்நலம் தேறிவந்த ஜெயலலிதாவை இறைவன் நம்மிடம் இருச்து பிரித்துவிட்டார் என்றும் எதற்காகவும் நம்மை கைவிடாத ஜெயலலிதா, மரணத்தின் மூலம் அனைவரையும் கைவிட்டுவிட்டார் என்றும் அழகையினுடே தெரிவித்தார்.

தன்னை  பொதுச்செயலராக தேர்வு செய்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்களின் அன்பு கட்டளையை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துள்ளது என்றும் சசிகலா தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு  இயக்கம்தான் வாழ்க்கை ஆனால்  எனக்கோ அம்மாதான் வாழ்க்கை என்றும்  பல்லாயிரம் கூட்டங்களுக்கு அம்மாவுடன்  சென்றுள்ளேன். 33 ஆண்டுகாலம் எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஆனால் இப்போது மைக் பிடித்து பேச வேண்டிய நிலை எனக்கு வந்துவிட்டது. எஞ்சிய வாழ்நாளை அதிமுகவுக்காக, தொண்டர்களுக்காக வாழவேண்டிய உறுதி எடுத்துள்ளேன் என்றார்.

ஒன்றரைக் கோடி தொண்டர்களை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன் என்று ஜெயலதாவின் ஆன்மா தன்னிடம் சொன்னதாக கூறிய சசிகலா, அம்மா விட்டுச் சென்ற கொள்கையில் நெல் முனையளவும் விலகாமல் கழகத்திற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு