திவாகரனுக்கு சசிகலா வழக்கறிஞர் நோட்டீஸ்..! சூடு பிடிக்கும் குடும்ப அரசியல் சண்டை..!

Asianet News Tamil  
Published : May 11, 2018, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
திவாகரனுக்கு சசிகலா வழக்கறிஞர் நோட்டீஸ்..! சூடு பிடிக்கும் குடும்ப அரசியல் சண்டை..!

சுருக்கம்

sasikala sent notice to divakaran

தனது பெயரையோ, புகைப்படதையோ திவாகரன் பயன்படுத்தக் கூடாது என சசிகலா வழக்கறிஞர்  திவாகரனுக்கு நோட்டீஸ் அனுபியுள்ளார் 

திவாகாரனுக்கு ராஜா செந்தூர் பாண்டியன் நோடீஸ் அனுப்பி  உள்ளார்.சசிகலா குடும்ப  பிரச்சனையில் தினகரனுக்கு எதிராக களம் இறங்கினார் திவாகரன்.முன்னதாக திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் தினகரனுக்கு உறவு  முறை ரீதியிலும், கட்சி ரீதியாகவும் பக்க பலமாக இருந்து வந்தார் திவாகரன்.

ஆனால் தினகரன் தனியாக தொடங்கிய கட்சியில் திவாகரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை...பின்னர் குடும்ப அரசியலில் குடும்ப சண்டை முற்றியது. 

தினகரன் ஆதரவு வெற்றிவேல் மூலமாக இதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில்,    தினகரனிடமிருந்து தனியாக பிரிந்து வந்தார் திவாகரன். பின்னர் தினகரன் ஒருபக்கம் திவகரனை  சாட, திவாகரன் ஒரு பக்கம் தினகரனை சாட இப்படி  தான் செல்கிறது காட்சி..

இதற்கிடையில், திவாகரன் ஒரு தனி கட்சியை  தொடங்கி விட்டார்..அதுவும் ஒரே நாளில் ...

இதை எல்லாம் கேள்விபட்ட, சசிகலா என்ன செய்வது என்று யோசனை செய்து, கடைசியில்  திவகரனுக்கு  எதிராக செயல்பட தொடங்கி விட்டார்.

அதன் எதிரொலி தான், தற்போது சசிகலா தரப்பிலிருந்து திவகரனுக்கு அனுப்பப்பட்ட நோடீஸ். 

PREV
click me!

Recommended Stories

'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!
இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!