வழக்கறிஞர் காரில் வலம் வரும் ஜூலி...! அரசியல் காமெடிக்கு பின்னணியில் யார்...?

Asianet News Tamil  
Published : May 11, 2018, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
வழக்கறிஞர் காரில் வலம் வரும் ஜூலி...! அரசியல் காமெடிக்கு பின்னணியில் யார்...?

சுருக்கம்

big boss julie political comedy

அறப்போராட்டமாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில், "எங்கம்மா சின்னம்மா..." என பீப் போடும் அளவிற்கு, அரசியல் வாதிகள் பற்றி அவதூறாக கத்தியே பல ஊடகங்களின் பார்வையில் பட்டவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரராக அறியப்பட்டு, பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரபலங்களுக்கு இருந்த வரவேற்ப்பை விட, ஜூலிக்கு தான் பொதுமக்கள் மத்தியில் அதிகம் வரவேற்ப்பு இருந்தது. 

ஆனால் கொடுத்த வாய்ப்பை கூட, சரியாக பயன்படுத்திக்கொள்ளாத ஜூலி... சில தில்லு முள்ளு வேலைகள் மற்றும் பொய் பேசியதால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதன் காரணமாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெறும் ஜூலியாக வெளியே வந்து, தற்போது தொகுப்பாளர், நடிகை என அவதாரம் எடுத்துள்ளார் ஜூலி. மேலும் ஒரு சில நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமாகினார். இதெல்லாம் அவருடைய இஷ்டம் என பொதுமக்கள் பலர் பொறுத்துக்கொண்டு தான் இருந்தார்கள். 

ஆனால் தற்போது... ரஜினி, கமல் எல்லாம் வேஸ்ட், நான் தான் அரசியலுக்கு பெஸ்ட் என கூறி அரசியல் கட்சி தொடங்க போறேன் என சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். 

இதை கேட்டதுமே பொதுமக்கள் பலர் இவரை கழுவி ஊத்தி வருகின்றனர்....

இதெல்லாம் சரி விடுங்க..., இதை கொஞ்சம் யோச்சீங்களா, ஜூலியின் அரசியல் பின்னணில் யார்...? எந்த தைரியத்தில் இவர் அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் என பல கேள்விகள் எழும். எனினும் இந்த கேள்விக்கு தான் பதில் இல்லை.

சமீபத்தில், தன்னை நர்ஸ் என்று கூறி சீன் போட்டு கொண்ட ஜூலி, எப்போது வழக்கறிங்கராக மாறினார்? அல்லது இவரின் அரசியல் பின்னணியில் உள்ளது ஒரு வழக்கறிஞர் தானா....? இப்படி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது ஜூலி பந்தாவாக காரில் இருந்து இறங்கி வந்து பேசும் போது அவரின் பின்னால் கார் கண்ணாடியில் தெரியும் வழக்கறிங்கர் ஸ்டிக்கர்.

தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வரும் இரு ஜாம்பவான்களே, அரசியலில் தன்னுடைய அடிகளை மிகவும் கவனமாக சிந்தித்து எடுத்து வைக்கும் நிலையில், ஒரே வருடத்தில் அதும் நெகடிவ் இமேஜ் மூலம் அறியப்பட்ட இவர் அரசியல் களத்தில் எந்த நம்பிக்கையில் வருகிறார் ? பின்னணியில் யார் யார் உள்ளனர்...? ஜூலியை அரசியல் காமெடி பேசும் காரணம் என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்
Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!