
கர்நாடக தேர்தல் வெற்றிக்காக தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை தடுத்து வைத்துள்ளது என பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளார் அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை.
ஆமாம், உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பை அமல்படுத்த இன்னும் திட்டம் வகுக்கவில்லை. கர்நாடக தேர்தலை வைத்துதான் பாஜக எந்த எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், அப்படியெல்லாம் இல்லவே இல்லை இது வித்தியாசமான கட்சி என தமிழிசையோ எல்லோரையும் தெறிக்கவிட்டார்.
ஆனால், எப்போதுமே தாறுமாறாக கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள் இப்போது நம்ம தமிழிசைக்கு தேங்க்ஸ் சொல்லும் நேரம் வந்துவிட்டது.
பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளார் நம்ம பச்சை தமிழச்சி தமிழிசை.
அதேதான், கர்நாடக தேர்தலுக்காகவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை எனச் சொன்ன தமிழிசை, அடுத்ததாக, "இது எல்லா கட்சிகளும் செய்யும் அரசியல்தான்" என்றும் கூறியுள்ளார். எல்லா கட்சிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லை என பகிரங்கமாக பாஜக உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்.
தேர்தலுக்காக தமிழ் விவசாயிகள் வாயிலும், வயிற்றிலும் அடிக்கப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக கூறுகிறார்கள் என்றால் இனியும் எப்படி தாமரை தமிழகத்தில் மலரும் என்று இவர்களால் பிரசாரம் செய்ய முடியும்?
என்னதான் நம்ம தமிழிசை ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், அவர் ஒரு பச்சை தமிழச்சி என்ற முறையில், தனது கட்சியின் இரட்டை சுயரூபத்தை லைட்டு போட்டு காட்டிவிட்டார்.