என்னை கட்சியில் இணைக்க முடியாது என கூறுவதற்கு யார் இவர்கள்? சசிகலா ஆவேசம்

By Ajmal KhanFirst Published May 25, 2022, 11:18 AM IST
Highlights

அதிமுகவில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு இல்லையென தெரிவித்த சசிகலா, தொண்டர்கள் தான்  தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார். 

அதிமுகவின் பிளவு- திமுகவிற்கு சாதகம்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் வாக்குகள் இராண்டாக பிளவு படுவது அதிமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுகவில் ஒரு சிலர் கூறி வருகின்றனர். சசிகலாவும் விரைவில் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பேன் எனவும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என கூறிவருகிறார். இதனை அதிமுகவில் மூத்த தலைவர்களோ சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். 

ஓபிஎஸ்-இபிஎஸ்-தொண்டர்கள் ஆதரவு இல்லை

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தொண்டர்கள் யாரும் தற்போது  ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பக்கம் இல்லை என்பதே உண்மை என கூறினார். எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக, மக்கள் பிரச்சனை எதற்குமே குரல் கொடுக்கவில்லை. ஆகவே மக்கள் என்னை தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வரவேண்டும் என்று கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதிமுக இணைப்பு, அதிமுக விற்கு மீண்டும் வருவேன் என்று கூறுவது தொண்டர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான் எனவும் தெரிவித்தார்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்  கூறியுள்ளது போல் தொண்டர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொண்டர்கள் யாரும் தற்போது ஓ.பி எஸ் ,ஈ.பி எஸ் பக்கம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என கூறினார். அதிமுகவை மீட்டெடுப்பதில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. தற்போது தீர்ப்பு கொடுத்தது கீழமை  நீதிமன்றம் தான். உச்சநீதிமன்றம் இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவில் தனக்கு இடம் இல்லையென கூறுவதற்கு யார் இவர்கள்  என கேள்வி எழுப்பியவர் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

முதல்வருக்கு நிர்வாக திறமை இல்லை

 திமுக ஆட்சியில் கொலை,கொள்ளை அதிகமாக நிகழ்வதற்கு காரணம் நிர்வாக திறமையில்லாததால் தான் காரணம் என கூறியவர், . முதல்வரின் கீழ் இருக்கும் காவல்துறை, முறையாக அவரின் கீழ்தான் இயங்குகிறதா என்று சந்தேகம் எழுகிறதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் தற்போது இருக்கும் தலைவர்கள் தன்னுடன் பேசி வருகின்றனர். அதை தற்போது வெளியில் சொல்ல இயலாது எனவும தெரிவித்தார். டெல்டா பகுதிகளில் கால்வாய்களில் தூர் வாரும் பணி முடிவடையாத நிலையில் மேட்டூர் அணையை எப்படி முதலமைச்சர் திறந்து விட்டார் என்பது புரியவில்லையெனவும் சசிகலா கூறினார்.


 

click me!