சசிகலா முன்கூட்டியே விடுதலை..! சு.சுவாமி மூலம் காய் நகர்த்தும் டிடிவி..!

Published : Dec 30, 2019, 10:30 AM IST
சசிகலா முன்கூட்டியே விடுதலை..! சு.சுவாமி மூலம் காய் நகர்த்தும் டிடிவி..!

சுருக்கம்

தற்போது சசிகலா சிறையில் இருப்பதற்கு மூலக் காரணம் யார் என்றால் அது சுப்ரமணியசுவாமி தான். ஜெயலலிதா – சசிகலா இணைந்து சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாக 1996ம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்த போது புகார் அளித்தவர் சுப்ரமணியசுவாமி தான். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடைபெற்று சசிகலாவிற்கு சிறை தண்டனை கிடைத்து அவர் பெங்களூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சுப்ரமணிய சுவாமி மூலம் தினகரன் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சசிகலா சிறையில் இருப்பதற்கு மூலக் காரணம் யார் என்றால் அது சுப்ரமணியசுவாமி தான். ஜெயலலிதா – சசிகலா இணைந்து சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாக 1996ம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்த போது புகார் அளித்தவர் சுப்ரமணியசுவாமி தான். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடைபெற்று சசிகலாவிற்கு சிறை தண்டனை கிடைத்து அவர் பெங்களூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற போது அவருக்கு ஆதரவாக முதல் கருத்தை வெளியிட்டவர் சுப்ரமணியசுவாமி தான். இதற்கு காரணம் சசிகலாவிற்கு எதிராக சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் காய் நகர்த்தியது தான். தமிழகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் பின்புலத்துடன் அதிகார மையத்தில் அந்த ஆடிட்டர் கோலோச்சுவதை சுப்ரமணியசுவாமி விரும்பவில்லை. மேலும் தமிழகத்தில் இருந்து ஆர்.எஸ்எஸ் பின்புலத்துடன் அதிகாரத்தில் இருக்கும் நபராக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் சு.சுவாமியின் பிளான்.

இதற்காகத்தான் ஆடிட்டர் சசிகலாவை எதிர்க்க, அவருக்கு ஆதரவாக சுப்ரமணியசுவாமி குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் கூட சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது குறித்து சுப்ரமணியசுவாமி பேசியிருந்தார். இதற்கு அவரது ஆதரவாளர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் கேள்விகளை முன் வைத்தனர். நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலாவிற்கு தண்டனை கிடைத்த நிலையில் அவரை முன்கூட்டியே விடுதுலை செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாடு எப்படி சரியாக இருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சசிகலா வேறு, தற்போதைய சசிகலா வேறு. அவர் திருந்தியுள்ளார். எனவே அவர் முன்கூட்டியே விடுதலை ஆவதில் என்ன தவறு இருக்கிறது? திருந்திய ஒருவர் மீண்டும் சகஜ வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன பிரச்சனை? என்று பதில் கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு மட்டும் அல்லாமல் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர அரசியல் ரீதியான சில முயற்சிகளையும் சுப்ரமணியசுவாமி மேற்கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இது குறித்து தினகரன் அவ்வப்போது சுப்ரமணியசுவாமியிடம் பேசுவதாக கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஆடிட்டரின் அரசியல் கணக்கிற்கு எதிராக தான் ஒரு கணக்கை போட வேண்டும் என்றும் அந்த கணக்கு சசிகலாவை மையமாக வைத்து இருக்க வேண்டும் என்பது தான் சுப்ரமணியசாமி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க காரணம் என்று சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!