பதவி ஏற்றதும் அதிரடி காட்டிய முதலமைச்சர் !! ஹேமந்த் ஷோரனின் ஆட்டம் ஆரம்பம் !!

By Selvanayagam PFirst Published Dec 30, 2019, 8:53 AM IST
Highlights

ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் ஷோரன் பதவி ஏற்றதும், அம்மாநில பழங்குடியின மக்கள் மீது பாஜக அரசு போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக  பதவியேற்றபின் ஹேமந்த் சோரன், மாநில செயலகத்தில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜார்கண்டில் நடந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) வெற்றி பெற்று மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் மம்தா, ராகுல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சோரனுக்கு மாநில கவர்னர் துருபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாவது முறையாக 44 வயதான பழங்குடித் தலைவர் மாநிலத்தின் 11 வது முதலமைச்சராக  பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று பதவிப்பிரமாணம் முடிந்த சில மணி நேரங்களில், சோரன், மாநில செயலகத்தில் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களான ஆலம்கீர் ஆலம், ராமேஸ்வர் ஓரான், சத்யானந்த் போக்தா ஆகியோரை சந்தித்து பேசினார். அதில், பழங்குடியினர் மீதான தேச துரோக வழக்குகளை வாபஸ் பெற  முடிவு செய்யப்பட்டது.

முந்தைய ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு சிஎன்டி மற்றும் எஸ்பிடி சட்டங்களில் மாற்றங்களை முன்மொழிந்தது. இந்த மாற்றங்கள் சுரங்க மற்றும் தொழில்களுக்கு சாலைகள், மின்சாரம், மேம்பாட்டு பணிகள் மற்றும் பிற விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன

இதனை எதிர்த்து ஜார்கண்டில் பழங்குடியினர் போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது.  இந்த வழக்குகள் தான் தற்போது வாபஸ் பெற்றப்பட உள்ளன.

click me!