ச‌சிகலா வெளியேவந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்... அடித்துகூறும் அதிமுக முன்னாள் எம்.பி..!

By vinoth kumarFirst Published Sep 18, 2020, 1:31 PM IST
Highlights

 சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுப்பாரோ, அதை பொருத்துதான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்று அரசியல் தாக்கம் இருக்கும் என்று கூறினார். 

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் எம்.பி.யும், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். 

சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் ஒரு விவாதமாக கிளம்பியுள்ளது. சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை கைப்பற்றுவார் என்று பல்வேறு தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் எம்.பி.  அன்வர் ராஜா கூறியுள்ளார். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு பணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி செல்ல இருக்கிறார். ஆகையால், முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்வர் ராஜா;- சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுப்பாரோ, அதை பொருத்துதான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்று அரசியல் தாக்கம் இருக்கும் என்று கூறினார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கர்நாடக சிறையில் இருந்து சசிகலா அடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், போராட்டம் நடத்தாமல் பின்வாங்கியதால் மும்மொழிக் கொள்கையை ஸ்டாலின் ஆதரப்பதாக கூறமுடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

click me!