மத்திய அமைச்சருக்கு எடப்பாடியார் எழுதிய அதிரடி கடிதம்..!! 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை.

Published : Sep 18, 2020, 12:50 PM IST
மத்திய அமைச்சருக்கு எடப்பாடியார் எழுதிய அதிரடி கடிதம்..!! 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை.

சுருக்கம்

மேலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும், தமிழகத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விகிதம் 93% சதவீதம் ஆக உள்ளதாகவும் முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய BPO திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும், 2ம் கட்ட பெருநகரங்களை மையமாக கொண்டு மத்திய அரசு இந்திய பி.பி.ஓ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் க்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்திய பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். 

மேலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும், தமிழகத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விகிதம் 93% சதவீதம் ஆக உள்ளதாகவும் முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக 13 நகரங்களில் 51 பி.பி.ஓக்களை மத்திய அரசு அமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 2ம் கட்ட பெருநகரங்களை மையமாக கொண்டு மத்திய அரசு இந்திய பி.பி.ஓ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய பி பி.ஓ திட்டத்தால் தமிழகத்தில் நேரடியாக 8387 நபர்களுக்கும், மறைமுகமாக 16477 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாகவும் கூறியுள்ளார. எனவே, தமிழ்நாட்டிற்கு இந்திய பி.பி ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், வெற்றிகரமாக பி.பி ஓ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால் இந்திய பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டத்தில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!