BREAKING சசிகலா விடுதலையாவது உறுதியானது... வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்.. கதிகலங்கும் அதிமுக..!

Published : Jan 19, 2021, 08:19 PM ISTUpdated : Jan 25, 2021, 01:51 PM IST
BREAKING சசிகலா விடுதலையாவது உறுதியானது... வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்.. கதிகலங்கும் அதிமுக..!

சுருக்கம்

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவது பற்றி அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்துள்ளது என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவது பற்றி அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்துள்ளது என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4 வருடங்களாக சிறையில் உள்ள இவர்களின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 

இதனிடையே சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி செலுத்தப்பட்டது. எனவே, இம்மாதம் 27ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் சில சிக்கல் இருப்பதாக தகவலும் வெளியானது. 

இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவது பற்றி அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்துள்ளது என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சசிகலாவை வரவேற்க அமமுகவினர் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதாவின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!