“அன்னிய செலாவணி வழக்கு...” - நீதிமன்றத்தில் சசிகலா உறவினர் பாஸ்கரன் ஆஜர்...!!!

Asianet News Tamil  
Published : May 04, 2017, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
“அன்னிய செலாவணி வழக்கு...” - நீதிமன்றத்தில் சசிகலா உறவினர் பாஸ்கரன் ஆஜர்...!!!

சுருக்கம்

sasikala relative baskaran in court

ஜெஜெ டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக  வி.கே.சசிகலா மீது 1996ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் தனது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யும்  நடைமுறையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சசிகலா தரப்பு வக்கீல், சசிகலா உடல் நிலை சரியில்லாததாலும், பயண  தூரம் அதிகம் உள்ளதாலும் அவர் விசாரணைக்கு வர இயலாது. எனவே, வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தால், “சரியாக குரல் கேட்கவில்லை, காட்சிகள் சரியாக தெரியவில்லை என்று புகார் கூறுவார்கள்.

அதே போல்ன்று குற்ற பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் படித்து பார்த்து கையொப்பம் இட வேண்டியிருக்கும். எனவே நேரில் ஆஜராக வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி வழக்கை மே 4ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார். சசிகலா மட்டுமின்றி அவரது உறவினர்களான டிடிவி.தினகரன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பாஸ்கரன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கில் சசிகலா மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படுமா, இல்லை சிறை மாற்று  உத்தரவு மூலம் சென்னை அழைத்து வரப்படுவாரா என பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அன்னிய செலாவணி வழக்கில் இன்று பாஸ்கரன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்தது. 

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது இரு தரப்பும் வாதாடலாம் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?