
பதவிக்காக அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் இழைத்துவிட்டதாக அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பா கடுமையாகச் சாடியுள்ளார்..
டெல்லியில் குடியிருந்தாலும் தமிழ்நாடு சூழ்நிலைகளை சசிகலா புஷ்பா கவனிக்கத் தவறவில்லை. முதல் அமைச்சர் என்னை அடித்தார் என்று நாடாளுமன்றத்தில் பேசி அனைவரையும் அதிரச் செய்த புஷ்பா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனை அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா என்ன?
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்ட போது ஓ.பி.எஸ். ஏன் ஆதரித்தார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது சி.பி.ஐ.விசாரணை கோராதவர் பதவியில் இல்லாத போது ஏன் விசாரணை அமைக்க வேண்டும் என்கிறார்.பதவி கிடைக்கிறதே என்பதற்காக மாஃபியா கும்பல்களுடன் ஓ.பி.எஸ். மீண்டும் இணைய உள்ளார். இது அதிமுக தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது 89 கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. சோதனைக்கு ஆளான விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்யாதது ஏன்?."
லஞ்சம் அளித்து இரட்டை இலை சின்னத்தை டிடிவி.தினகரன் பெற முயற்சிப்பது ஏன்? அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.தமிழ்நாடு போலீசில் ஊழல் மலிந்துவிட்டது.
ஒரு குடும்பம் சொல்வதை மட்டுமே போலீஸ் செயல்படுத்துகிறது..இவ்வாறு தனது பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.