சசிகலா புஷ்பாவின் கணவருக்கு அடி உதை  - மண்டை உடைந்த நிலையில் போலீசார் மீட்டனர் 

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 02:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சசிகலா புஷ்பாவின் கணவருக்கு அடி உதை  - மண்டை உடைந்த நிலையில் போலீசார் மீட்டனர் 

சுருக்கம்

அதிமுக அலுவலக்த்துக்குள் நுழைய முயன்ற சசிகலா புஷ்பாவின் கணவருக்கு சராமாரியாக அடிஉதை விழுந்தது,   போலீசார் காப்பாற்றியதால் தப்பினார்.
 முதலவர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரை எதிர்த்த அதே வாயால் அவர் சிறந்த தலைவர் என உல்டா அடித்தார் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா. 


தொடர்ந்து சின்னம்மா எனப்படும் வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளராக்க விடமாட்டேன் என்று பேசிவருகிறார். மேலும் ஜெயலலிதா சாவில் மர்மமிருப்பதாக வழக்கும் தொடர்ந்துள்ளார். 


 அது மட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். 


சசிகலா புஷ்பாவின் தொடர் நடவடிக்கையால் அவர் மீது செம கடுப்பில் இருந்தது கார்டன் வட்டாராம். இந்த நிலையில் நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவுடன் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு விருப்ப மனுவுடன் வந்தனர்.
இவர்கள் வரும் தகவல் காலை முதலே தீயாக பரவியதால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிக்கப்பட்டனர்.

விருகை வி.ன். ரவி ,ஈரோடு சிந்து ரவிச்சந்திரன் , மகளிர் அணி வேளாங்கன்னி தலைமையில் ஆட்கள் குவிக்கப்பட்டனர். சசிகலாவின் கணவர் திலகர் உள்ளே நுழைந்தவுடனே அவனை கொல்லுடா , வெட்டுடா என்ற கோஷத்துடன் சரமாரியாக தாக்கினர். கீழே விழுந்த அவரை மிதி மிதி என்று மிதித்தனர். 


தனி நபராக மாட்டிக்கொண்ட திலகரின் மூக்கு வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அடி வாங்குவது சசிகலாவின் கணவர் என முதலில் யாருக்கும் தெரியவில்லை. தர்ம அடி வாங்கி கொண்டிருந்த திலகரை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் காப்பாற்றி அழைத்து சென்றனர். 
சசிகலா புஷ்பா அண்ணா திமுக தலைமை  அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!