ஜெ வைப் போன்று சசிகலாவுக்கும் வாழ்த்துப்பாடல்..!! "தாயை அழைக்கிறோம் தலைமை ஏற்கவே...!!"

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஜெ வைப் போன்று சசிகலாவுக்கும் வாழ்த்துப்பாடல்..!! "தாயை அழைக்கிறோம் தலைமை ஏற்கவே...!!"

சுருக்கம்

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் கட்சித் தலைவர்களை புகழ்ந்து அந்தந்த கட்சியினர் பாடல்களை வெளியிடுவது வழக்கம். அந்தப் பாடல்களில் தலைவர்களின் கொள்கைகள்,திட்டங்கள், செயல்பாடுகள் என எல்லா விபரங்களையும் கோர்த்து எழுதும்போது தொண்டர்கள் உற்சாகமடைவார்கள்.

அந்த வகையில் புதிதாக ஒரு பாடல் ஒன்று சைமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

’ அன்னை வடிவிலே உன்னை பார்க்கிறோம்

 தலைமை ஏற்கவே தாயை அழைக்கிறோம்

தியாகத்தின் சின்னமே…நியாயத்தின் உருவமே..

இளகிய உள்ளமே…இறைவனின் இல்லமே…

கழகத்தைக் காத்திடும் கண்ட தெய்வமே…

பாதத்தில் பணிகிறோம்…அம்மா…சின்னம்மா…

காவிரி வெள்ளம் கரைகளைத் தாண்டி..

பாய்வது போல பரவசத்தோடு..பொன்மனச் செல்வி மறுஉருவாக…

புன்னகையோடு இருவிரல் காட்டி…

சின்னம்மா வருகவே…சின்னம்மா வருகவே…

இப்படிப் போகிறது அந்தப்பாடல்..சசிகலாவை அதிமுக வுக்கு தலைமை ஏற்க வருமாறு அவரது ஆதரவாளர்கள் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். வைரலாகி வரும் இந்தப் பாட்டைப் போன்று ஜெவின் அண்ணன் மகள் தீபாவை புகழ்ந்து விரைவில் இன்னொரு பாடல் நிச்சயமாக வரும்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு