இலங்கையில் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடு செய்த ஜெகத்ரட்சகன் !! தமிழ் பேராளிகள் எல்லாம் எங்க போனாங்க? கொந்தளித்த சசிகலா புஷ்பா !!

Published : Sep 20, 2019, 11:20 AM IST
இலங்கையில் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடு செய்த ஜெகத்ரட்சகன் !! தமிழ்  பேராளிகள் எல்லாம் எங்க போனாங்க? கொந்தளித்த சசிகலா புஷ்பா !!

சுருக்கம்

லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கையில் வாழ்வாதாரத்தை இழந்து நின்ற தமிழகர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்  பங்கேற்க கூடாது என போராட்டம் நடத்திய தமிழ் போராளிகள், தற்போது திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் இலங்கையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறித்து ஏன் மௌனமாக இருக்கிறார்கள்  ? என சசிகலா புஷ்பா எம்.பி, கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எம்.பி. சசிகலா புஷ்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என தமிழகத்தில் ஏராளமான தமிழ் போராளிகள் போர்க்கொடி உயர்த்தினர். குறிப்பாக எங்கே ரஜினிகாந்த் புகழ் பெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் சீமான் ஓவராக பொங்கினாரே! என  கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் இன அழிப்பிக்கு மூலகாரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் சொகுசு, ஆடம்பர பங்களா கட்டியுள்ளாரே, இதை எதிர்த்து எந்த தமிழ் போராளி குரல் கொடுத்தார் எனவும் அவர் கொந்தளித்துள்ளார்.

தற்போது திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இலங்கையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதெல்லாம் தமிழகத்தில் தமிழ் போராளிகளின் கண்ணுக்கு தெரியவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த்துக்கு ஒரு நீதி… ஜெகத்ரட்சகனுக்கு ஒரு நீதியா ? என கேள்வி எழுப்பியுள்ள சசிகலா புஷ்பா, இவர்கள் எல்லாம் தமிழ் போராளிகள் அல்ல…தமிழ் போலிகள் என அதிரடியாக தெரிவத்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!