அமித் ஷா சொன்ன பிறகே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைத்தோம்..! சேம் சைடு கோல் போட்ட மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Sep 20, 2019, 10:45 AM IST
Highlights

அமித்ஷாவின் டிவிட்டர் அறிவிப்பு வந்த பிறகே திமுக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அதாவது அமித் ஷா இந்தியை திணிக்கவில்லை என்று கூறிய பிறகே போராட்டத்தை ஒத்திவைத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் போராட்டம் நடத்த மட்டும் உயர்மட்ட குழுவை கூடி ஆலோசித்து முடிவெடுத்த ஸ்டாலின் அந்த போராட்டத்தை ஒத்திவைத்ததை மட்டும் ஏன் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரோ என்று சலசலப்பு எழுந்துள்ளது. 

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின் அமித் ஷா சொன்ன பிறகே போராட்டத்தை கைவிட்டோம் என்று தன்னை அறியாமல் கூறிவிட்ட நிகழ்வு நடந்துள்ளது.

சென்னையில் திமுக முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டது ஏன் என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, தமிழை காக்க, திணிக்கப்படும் இந்தியை எதிர்க்க நாம் ஒரு மாபெரும்  போராட்டத்தை அறிவித்திருந்தோம். ஆனால் இந்த போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை கவர்னர் அலுவலகத்தில் இருந்து செயலர் தொடர்பு கொண்டு கவர்னர் உங்களை சந்திக்க விரும்புவதாகவும் உடனே வரமுடியுமா என கேட்டார்.  ஆனால் எனக்கு பலவேலை உள்ளது என கூறினேன். பின்னர் நீங்கள் வரக்கூடிய நேரத்திற்கு கவர்னர் காத்திருக்கிறார் என செய்தி வருகிறது. அதன் பிறகு தலைமை கழகத்தினருடன் பேசி கவர்னரை சந்தித்தோம். இதன் பிறகு போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் இந்த சந்திப்பு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது.

கவர்னரை சந்தித்த போது அமித் ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறினார். மேலும் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கவர்னர் தெரிவித்தார். ஆனால் இதை எப்படி நம்புவது மத்திய அரசு அறிவித்தால் தானே நம்ப முடியும் என்று கவர்னரிடம் கூறினேன்.

இதன் பிறகு அமித்ஷாவின் டிவிட்டர் அறிவிப்பு வந்த பிறகே திமுக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அதாவது அமித் ஷா இந்தியை திணிக்கவில்லை என்று கூறிய பிறகே போராட்டத்தை ஒத்திவைத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் போராட்டம் நடத்த மட்டும் உயர்மட்ட குழுவை கூடி ஆலோசித்து முடிவெடுத்த ஸ்டாலின் அந்த போராட்டத்தை ஒத்திவைத்ததை மட்டும் ஏன் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரோ என்று சலசலப்பு எழுந்துள்ளது. எது எப்படியோ அமித் ஷா கூறித்தான் போராட்டத்தை கைவிட்டோம் என்பதை ஸ்டாலின் தன்னை அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

click me!