சசிகலாவிற்கு ஆதரவாக அடுத்தடுத்து போஸ்டர்.. கடுப்பில் அதிமுக தலைமை... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

Published : Feb 02, 2021, 01:18 PM IST
சசிகலாவிற்கு ஆதரவாக அடுத்தடுத்து போஸ்டர்.. கடுப்பில் அதிமுக தலைமை... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்;-  கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 

தேனி மாவட்டத்தை சார்ந்த பண்ணை சின்னராஜா (ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர்) , திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சார்ந்த அரசங்குடி சாமிநாதன் (திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியம்)( மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்தலைவர்) , மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த குத்புதின் (செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் இரா.அண்ணாதுரை மற்றும்  திருநெல்வேலி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா ஆகிய இருவரையும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!