திமுக ஆட்சி அமைக்க ரகசிய ஒப்பந்தம் : மோடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சசிகலா!

Asianet News Tamil  
Published : May 21, 2017, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
திமுக ஆட்சி அமைக்க ரகசிய ஒப்பந்தம் : மோடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சசிகலா!

சுருக்கம்

sasikala planning to join with dmk

எவ்வளவு பெரிய கோட்டையாக இருந்தாலும் அதில் ஒரு ஓட்டை இருக்கும் என்பார்கள். அந்த ஓட்டையை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள், மிகப்பெரிய ராஜ தந்திரத்தையும் முறியடித்து விடுவார்கள்.

அப்படி ஒரு ராஜ தந்திர நடவடிக்கையில் இறங்கி, தம்மையும், தமது குடும்பத்தையும் அரசியலை விட்டே ஓரம் கட்ட நினைக்கும், பிரதமர் மோடிக்கு வலுவாக செக் வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சசிகலா.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்த பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருவதுதான் அனைவருக்கு தெரியும்.

ஆனால், எந்தவித ஓசையும் இல்லாமல், சசிகலா தரப்பிற்கும், திமுகவிற்கும் இடையே ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றி, எடப்பாடிக்கோ, பன்னீருக்கோ கூட தெரிய வாய்ப்பில்லை என்கின்றனர், சசிகலாவுக்கு நெருக்கமான அரசியல் புள்ளிகள்.

சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் அரசியலை விட்டே ஓரம் கட்ட வேண்டும் என்ற நோக்கில்தான், பிரதமர் மோடி, காய் நகர்த்தி வருகிறார்.

அதே சமயம், தமக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, மோடியின் ராஜ தந்திரம், எந்த விதத்திலும், தமிழகத்தில் பலித்து விடக்கூடாது என்று, ரகசியமாக காய் நகர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டார் சசிகலா.

அதை, தெளிவாக உணர்ந்து கொண்ட மோடி, அதிமுகவை உடைக்கும் நோக்கத்தை கைவிட்டு, தற்போது உடைந்த அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் என்று தற்போது, அதிமுகவில் 87 பேர் இருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 47 பேர், எந்த நிலையிலும் சசிகலாவாவை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளவர்கள்.

வருமானவரி, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் என்று, அந்த 47 பேரையும் எந்த விதத்திலும், மத்திய அரசு மிரட்ட முடியாத வகையில், அவர்கள் அனைவரும், தங்களது சொத்து மற்றும் வருவாய் கணக்குகளை தெளிவாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், திமுகவிற்கு 89 எம்.எல்.ஏ க்கள் உள்ளனர். அவர்களுக்கு மேலும் 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருந்தாலே, ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையே உள்ளது.

அதனால், எடப்பாடி, பன்னீர் ஆதரவு என எத்தனை எம்.எல்.ஏ க்கள் பிரிந்தாலும், 47 எம்.எல்.ஏ க்கள், சசிகலா, என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்டுப்படும் மனநிலையில் இருக்கின்றனர்.

இவர்களை எந்த அணியாலும் விலை கொடுத்து வாங்க முடியாது, மத்திய அரசாளும் மிரட்டி பணிய வைக்க முடியாது.

அதனால், அந்த எம்.எல்.ஏ க்கள் ஆதரவில், திமுகவுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார் சசிகலா.

அதன்படி, மத்திய அரசு, சேகர் ரெட்டி டைரியை வைத்து மிரட்டினாலும், ஆட்சியை கவிழ்க்க முற்பட்டாலும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் துணையுடன் தமிழத்தில் திமுக ஆட்சி அமைக்கும்.

திமுக தலைமையில் ஆட்சி அமையும்போது, அதை எக்காரணம் கொண்டும், மத்திய அரசால் கலைக்க முடியாது, அப்படியே கலைத்தாலும், நீதி மன்றத்தின் மூலம், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

மேலும், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் திமுகவிற்கு ஆதரவு அளிப்பார்கள், அதற்காக, அவர்களுக்கு தேவையான உதவிகளை மட்டும் நீங்கள் செய்து கொடுங்கள். எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சசிகலா தரப்பினர் திமுகவிடம் கூறி விட்டனர்.

அதே போல், தங்களது வணிக நடவடிக்கைகளுக்கு மட்டும் இடையூறு கொடுக்காமல் இருந்தால் போதும் என்று சசிகலா தரப்பினர், திமுக தரப்பில் பேசி முடிவு செய்துள்ளதாக தகவல்.

திமுகவும், இந்த டீலை ஏற்றுக் கொண்டதால், மோடியின், சசிகலா குடும்ப ஆதிக்க ஒழிப்பு, அதிமுக உடைப்பு, ஒன்றிணைப்பு போன்ற அனைத்து வியூகங்களும் தவிடு பொடி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

பரம எதிரியான திமுகவிடம், சசிகலா இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொள்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி, இதை சசிகலா கொடுத்த அதிர்ச்சி வைத்தியமாகவே கருதுகிறார்.

அதன் காரணமாகவே, அதிமுக ஆட்சியை தொடர விரும்பாமலும், கலைக்க முடியாமலும், மோடி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் அனுபவம் வாய்ந்த வலுவான ராஜ தந்திரத்தையும், தமிழனின் சாதாரண ராஜ தந்திரம் மண்ணை கவ்வ செய்துவிடும் என்பதற்கு இதுவே சரியான உதாரணம் என்கின்றனர், தமிழர் ஆதரவு அரசியல் நோக்கர்கள்.

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!