"ஓபிஎஸ் மோடி சந்திப்பு பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது" - ஜகா வாங்கும் பொன் ராதா!!!

Asianet News Tamil  
Published : May 21, 2017, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"ஓபிஎஸ் மோடி சந்திப்பு பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது" - ஜகா வாங்கும் பொன் ராதா!!!

சுருக்கம்

i dont know anything about ops modi meet says pon radha

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுபவமில்லாதவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.  மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3400 கோடி மதிப்பீட்டில் இரட்டைரயில் மற்றும் மின்மயமாக்கப்பட்ட வழித்தடம் அமைக்கப்படும். என்று கூறினார்.

"இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படும். என்று தெரிவித்தார்.

 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு நேரடியாக பதில் அளிப்பதைத் தவிர்த்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனக்கு தெரியாது என்று மட்டும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!