
பதற்றத்தின் உச்சத்தில் இருக்கின்ற சசிகலா எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்திக்க வரவுள்ளதாகவும் வழியில் போலீசார் தடுத்தால் அங்கேயே சாலை மறியல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு கூடி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதை அடுத்து சசிகலா கடும் கோபமடைந்தார்.
இனியும் பொறுமை காக்க முடியாது என்று பேட்டியளித்து விட்டு கோபமாக எம்எல்ஏக்கள் கூவத்தூர் நோக்கி சென்ற சசிகலா அங்கு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தன்னை கை விட்டு விட வேண்டாம், இக்கட்டான நேரத்தில் ஆதரவு கொடுத்தால் அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்றும் எம்எல்ஏக்களை கேட்டு கொண்ட சசிகலா ஏற்கெனவே கவர்னரிடம் கடிதத்தை அளித்து நேரம் கேட்ட அடிப்படையில் எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்திக்க கவர்னர் மாளிகை நோக்கி வரும் பட்சத்தில் அவர்களது வாகன அணிவகுப்பை போலீசார் தடுத்தால் சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறு செய்யமாட்டார், சசிகலா மற்றும் ஒரு சில மட்டும் கவர்னரை சந்திக்க வருவார்கள் என்று கூறப்டுகிறது.
கவர்னர் அனுமதி மறுத்தால் ஜெயலலிதா சமாதியில் சென்று அமர்வது என்று பலவேறு முடிவுகளை சசிகலா தரப்பு யோசித்து வைத்துள்ளதாக கூறபடுகிறது.
போலீசாரும் அனைத்தையும் முறியடிக்கும் விதமாக தங்கள் வியூகத்தை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.