ஒபிஎஸ் வீட்டை நோக்கி  படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய  தகவலால்  மேலும் பரபரப்பு ...!!!

 
Published : Feb 11, 2017, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ஒபிஎஸ் வீட்டை நோக்கி  படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய  தகவலால்  மேலும் பரபரப்பு ...!!!

சுருக்கம்

ஒபிஎஸ் வீட்டை நோக்கி  படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய  தகவலால்  மேலும் பரபரப்பு ...!!!

தமிழக அரசியல்

தமிழகத்தில்,  அதிமுக  கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  பெரும்  பரபரப்பு  நிலவி வரும் நிலையில், நிலைமையை  சமாளிப்பதற்காக, சசிகலா  ஆதரவு  எம்எல்ஏக்கள் தங்கியுள்ள , கூவத்தூர் சொகுசு மாளிகைக்கு  விரைந்துள்ளார்  அதிமுக  பொதுச் செயலாளர்  சசிகலா.

சமாதானத்தில் இறங்கிய சசிகலா :

அதிமுக கட்சி  இரண்டாக  உடைந்ததால், சசிகலா  ஆதரவு  எம்எல்ஏக்கள்  ஒவ்வொருவராக,  பன்னீர்  செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீதமுள்ள  சில பல எம்எல்ஏக்களை  தனக்கு ஆதரவாகவே  வைத்துக்கொள்வதற்காக,சசிகலா  போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூர் விரைந்தார்  சசிகலா :  

பன்னீர் செல்வத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போது மற்ற எம்எல்ஏக்களை   சமாதானப்படுத்த, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள  கூவத்தூர்  சொகுசு பங்களாவுக்கு நேரடியாக சென்றுள்ளார்.

பேச்சு வார்த்தை :

இந்த ஒரு பரப்பான சூழலில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற  எதிர்பார்ப்பு  அனைவரிடமும்  ஏற்பட்டுள்ளது. சசிகலா  எம்எல்ஏக்களுடன்  பேச்சு வார்த்தை  நடத்தும்  போது,  வாக்குவாதம்  கூட  ஏற்படலாம்  என  அரசியல்  வட்டாரங்கள்  கூறுகிறது.  மேலும்,  பொதுமக்களிடமிருந்து அதிகளவு  ஆதரவு  பன்னீர்  செல்வத்திற்கு  இருக்கும்  நிலையில்,   அந்தந்த  தொகுதி எம் எல் ஏக்களுக்கு  பொதுமக்கள் பன்னீர்   செல்வதிற்கே  ஆதரவு தெரிவிக்க   வேண்டும் என  அழுத்தம்  கொடுக்கப்பட்டு வருவதாகவும்  செய்திகள்  வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபிஎஸ் வீட்டை நோக்கி  படையெடுக்கும் அமைச்சர்கள்..

 இந்நிலையில், மேலும் சில தற்போது ஓ.பி.எஸ் வீட்டை நோக்கி  சில  அமைச்சர்கள்  படையெடுத்து வருவதாக  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அதில், சிறுபான்மை துறை அமைச்சர் -நிலோபர் கபில் , பால் வளத்துறை-ராஜேந்திர பாலாஜி ,

மீன்வளத்துறை- ஜெயக்குமார் , வணிக வரித்துறை-கே.சி. வீரமணி

ஆகியோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அவரது இல்லத்திற்கு வர உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

.

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!