“எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே “..பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்த கங்கைஅமரன் ...!!

 
Published : Feb 11, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய்  இந்த நாட்டிலே “..பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்த கங்கைஅமரன் ...!!

சுருக்கம்

“எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய்  இந்த நாட்டிலே “..பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்த கங்கைஅமரன் ...!!

இசையமைப்பாளர்  கங்கை அமரன் :

இசையமைப்பாளர்  கங்கை அமரன் , தன்னை மிரட்டி தனக்கு சொந்தமான  பண்ணை வீட்டை,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ,  சசிகலா தரப்பினர் வாங்கியதாக சென்ற வாரம்  செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பாக  பேசப்பட்டு வந்தது.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி....

இந்த  விவரம் குறித்து தற்போது,  தனியார் தொலைகாட்சிக்கு  பேட்டி அளித்த  இசையமைப்பாளர் கங்கை அமரன் , “எத்தனை காலம் தான் ஏமாற்றுப்வாய்இந்த நாட்டிலே “ என பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்தார்  . அப்போது தோடர்ந்து  பேசிய அவர், அந்த  சொத்து  குறித்து பல  விவரங்களை  விவரிவித்தார்.

பாட்டன்  காலத்திலேயே  வாங்கினேன் :

தான்  திரைத் துறைக்கு  வந்து  சிறிது  சிறிதாக  சேர்த்து வைத்த பணத்தில், ஆரம்பத்தில்  3  ஏக்கர்  நிலம் வாங்கியதாகவும்  பின்னர்,  மெல்ல  மெல்ல  மற்ற நிலங்களையும்  சேர்த்து  சுமார்  27 ஏக்கர்  நிலம்  வாங்கியதாகவும்  தெரிவித்தார்.

ஊர் பொதுமக்கள்  என்ன  சொன்னார்கள் :

ஊர் பொதுமக்கள் ,  அப்பகுதியில்  திருவிழா  நடக்கும் போது மட்டும் இடம் கொடுத்தால் போதும் என  தெரிவித்ததாகவும்மேலும்,  அன்றொரு  மாலையில்  திடீரென  அந்த பங்களாவுக்கு ஒரு  கார் வந்ததாகவும்,  அடுத்த நாளே  சசிகலா  தரப்பிலிருந்து, ஒரு கார்  அனுப்பி, கங்கை அமரனுக்கு  பொக்கே கொடுத்து , அதே  போயஸ்  கார்டனுக்கு  அழைத்து  சென்றதாகவும், தெரிவித்தார்.

சொற்ப பணம் கொடுத்து கையெழுத்து

போயஸ்  கார்டனில், சொற்ப பணம் கொடுத்து  தன்னிடமிருந்து  பத்திரத்தில்  கையெழுத்து  வாங்கியதாக வும்  கூறினார்.  

டீலிங்  பேசினது யார் ?

சசிகலா  மூலமாகத்தான் சிலர்  தன்னிடம்  பேசியதாகவும், திவாகரனா இல்ல தினகரனா ? அவர் பெயர் கூட சரியா  ஞாபகம் இல்லை. அவர் தான்  எண்ணுடன் டீலிங்  பேசினார், பணத்தை கொடுத்தார் . பத்திரத்தில் கையெழுத்து  வாங்கினார் என  இசையமைப்பாளர்  கங்கை அமரன் தெரிவித்தார்.  

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு