ஆட்டோ டிரைவர் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார் சசிகலா

 
Published : Dec 18, 2016, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஆட்டோ டிரைவர்  குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார் சசிகலா

சுருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை ஆட்டோ டிரைவர் குழந்தைக்கு சூட்டினார் சசிகலா.

முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகள் இன்னல்களுக்கு மத்தியில் கட்சியை கட்டி காத்து மிகப்பெரும் இயக்கமாக ஆட்சியில் அமர்த்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

ஆட்சியில் சாதாரண மக்களை கவரும் விதமாக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனால் தான் மக்கள் அவரது மறைவுக்கு லட்சக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தங்கள் திருமணம் முடிந்தவுடன் நேரடியாக ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர் ஒரு தம்பதிகள், நேர்த்திக்கடன் போல் தங்கள் வீட்டில் துக்கம் விழுந்தது போல் மொட்டை அடிக்கின்றனர் தொண்டர்கள். 

ஜெயலலிதா சமாதியில் கட்சித்தொண்டர் ஒருவர் தனது மகன் திருமணத்தை மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் நடத்தியுள்ளார். இதன் மூலம் மக்கள் மனதில் மறைந்தும் மறையாமல் வாழ்கிறார் ஜெயலலிதா.  

போயஸ் இல்லத்துக்கு வரும் தொண்டர்கள் பொதுமக்களை சசிகலா சந்திக்கிறார். அவரை கட்சி பொறுப்பேற்க தொண்டர்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று போயஸ் இல்லத்துக்கு தனது மனைவி கைகுழந்தையுடன்  வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சசிகலாவிடம் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி கோரிக்கை விடுத்தார். 

சசிகலா அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார். பின்னர் குழந்தைக்கு தன்னுடைய பரிசாக ஒரு பவுன் மோதிரத்தை வழங்கினார். இதனால் மெய் சிலிர்த்து போன தொண்டர்  உங்கள்  உருவத்தில் அம்மாவை பார்க்கிறேன் என்று கூறினார். சசிகலா சிரித்து கொண்டே அனுப்பி வைத்தார்

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!