சிறையா? அதிமுக அலுவலகமா?? - சசிகலாவுடன் 5 எம்எல்ஏக்கள் சந்திப்பு!

 
Published : Jun 20, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
சிறையா? அதிமுக அலுவலகமா?? - சசிகலாவுடன் 5 எம்எல்ஏக்கள் சந்திப்பு!

சுருக்கம்

sasikala meeting with 5 mla

பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் சசிகலாவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து துணை பொதுச்செயலாளராக தினகரனும், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பேற்றனர்.

இதையடுத்து இருவரும் தமக்கு தீவிர விசுவாசியாக இருப்பார்கள் என சசிகலா பெரும் கோட்டையை கட்டி வந்தார். ஆனால் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி ஒரு தடவை கூட சசிகலாவை சென்று பார்க்கவில்லை.

ஆனால் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து பேசி வந்தனர்.

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரன் தன் பங்கிற்கு சசியின் ஆலோசனை கேட்காமல் ஆர்.கே.நகர் தேர்தலில் நானே போட்டியிடுவேன் என களத்தில் இறங்கினார்.

மேலும் பணபட்டுவாட விவகாரத்திலும் சிக்கினார். இரட்டை இலை சின்னத்திற்கு ஒ.பி.எஸ் தரப்புடன் போட்டி போட்டதால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதையடுத்து பணப்பட்டுவாடா விவகாரத்தால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது.  இதனால் சசிகலா கடும் கோபத்திற்கு ஆளாகியதாக தெரிகிறது.

பின்னர், இரட்டை இலையை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். இனியும் விட்டால் ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும் என்பதை உணர்ந்த எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவியை கட்சியை விட்டு ஒதுக்க முடிவு செய்தது.

இதைதொடர்ந்து இரு அணிகளும் ஒன்றாக இணையும் என்று எதிர்பார்த்த எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.

ஆனால் எடப்பாடியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, டிடிவி தினகரன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைதொடர்ந்து பழனியப்பன், செந்தில் பாலாஜி, கென்னடி, முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் பரப்பன அக்ரஹார சிறையில் நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் தமிழகத்தில் அடுத்தகட்ட புயல் ஆரம்பமாவதற்கான கால சூழ்நிலை நிலவி வருவதால் அரசியல் கட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்