பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் திடீர் சந்திப்பு – 3 மணிநேரம் தீவிர ஆலோசனை

 
Published : Feb 21, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் திடீர் சந்திப்பு – 3 மணிநேரம் தீவிர ஆலோசனை

சுருக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிமுக பொது செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, சசிகலா உள்பட 3 பேர், பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தனர்.

இதையொட்டி, நேற்று மாலை அதிமுக துணை பொது செயலாளர் டிடி.வி.தினகரன், பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறைச்சாலைக்கு சென்றார். அப்போது, அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இளவரசி மகன் விவேக் உள்பட சிலர் சென்றதாக தெரிகிறது.

மாலை 4 மணிக்கு சசிகலாவை பார்க்க அனுமதி பெற்றனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகே, சசிகலா மற்றும் இளவரசியை சந்தித்தனர். முதலில், தினகரன் மட்டும் சசிகலாவை சந்தித்தார்.

அப்போது, சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, எதிர்க்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டது முதல் கவர்னரை சந்தித்தது அவரை அனைத்து விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் எடப்படி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், அவர் கையெழுத்திட்ட கோப்புகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெங்களூர் செல்ல இருப்பது, பெங்களூர் சிறையில் இருந்து சசிகலாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து தீபக் மற்றும் விவேக் ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர். இரவு சுமார் 7.30 மணி வரை, அவர்கள் பேசியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர், அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

தினகரன் மட்டும் சென்னை திரும்பியதாகவும், மற்ற அனைவரும் பெங்களூரில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள், பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறைச்சாலைக்கு சென்று, சசிகலாவை சந்தித்து பேச உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!