ஊர் ஊருக்கு துரத்தி அடிக்கப்படும்  எம்எல்ஏக்கள்…அஞ்சலி போஸ்டர் ஒட்டிவருவதால் கலக்கம்..

 
Published : Feb 21, 2017, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஊர் ஊருக்கு துரத்தி அடிக்கப்படும்  எம்எல்ஏக்கள்…அஞ்சலி போஸ்டர் ஒட்டிவருவதால் கலக்கம்..

சுருக்கம்

ஊர் ஊருக்கு துரத்தி அடிக்கப்படும்  எம்எல்ஏக்கள்…அஞ்சலி போஸ்டர் ஒட்டிவருவதால் கலக்கம்..

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில், நுற்றுக் கணக்கானோர் வீடு வீடாகச் சென்று, அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அதில்  திருமதி நிலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை, கோபத்துடன் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இனி, இவர் தொகுதி பக்கம் வந்தால், செருப்பு மற்றும் துடைப்பம் மூலம் தக்க பாடம் கற்பிக்கப்படும். இப்படிக்கு, வாணியம்பாடி தொகுதி, மானம் உள்ள 
தமிழ் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு, மக்களுக்கு துரோகம் செய்த சம்பத், தொகுதி மக்களை பார்க்க வந்த போது, அகால மரணம் அடைந்தார்' என கடலுர் மாவட்டத்தில் பரவிய வாட்ஸ் அப்பில் பரவியது.

.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபுவிற்கு எதிராக, பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களுடன், ஓ.பி.எஸ்., ஆதரவு அ.தி.மு.க., நிர்வாகிகள், காலை, எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடிக்கு எதிராக பொது மக்கள் கறுப்புக் கொடி காட்டினர். இதையடுத்து அவர் அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆறுமுகம் வீட்டில் நேற்று நள்ளிரவு சிலர், இவரது வீட்டில் கல்வீசி விட்டு, அவருக்கு எதிராக கோஷமிட்டு சென்றனர்.

இதே போன்று தமிழகம் முழுவதுத் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு