
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுனரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மேலும் தன்னை முதலமைச்சர் ஆக ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போயஸ்கார்டனில் இருந்து புறப்பட்டு மெரீனா சென்றார்.
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் ஆளுநரிடம் அளிக்க உள்ள எம்.எல்.ஏக்கள் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மேலும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கி பன்னீர்செல்வத்திற்கு 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாக விளக்கமளித்தார்.
ஓ.பி.எஸ்ஸை தான் கட்டாயபடுத்தி ராஜினாமா செய்ய வைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.