வந்துட்டேன் சொல்லு திரும்பி வந்துட்டேன் சொல்லு.. கெத்தாக தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா..!

By vinoth kumarFirst Published Jan 21, 2021, 2:49 PM IST
Highlights

சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் உறவினர்கள், தொண்டர்களை சசிகலா கையை அசைத்தார்.

சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் உறவினர்கள், தொண்டர்களை சசிகலா கையை அசைத்தார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று பிற்பகலில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று இல்லை என்பது உறுதியானது. மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் இருப்பதால் தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதனையடுத்து, சசிகலாவுக்கு  சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மருத்துவர்களின் பரிந்துரையை  அடுத்து சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்ற விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது,  சக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் உறவினர்கள், தொண்டர்களை சசிகலா கையை அசைத்தார். 

click me!