கட்சி நஞ்சாகிறது… ஒரு செகண்ட் கூட பொறுக்க மாட்டேன்… அதிமுகவினருக்கு சசிகலா திடீர் கடிதம்…

Published : Oct 19, 2021, 07:48 PM IST
கட்சி நஞ்சாகிறது… ஒரு செகண்ட் கூட பொறுக்க மாட்டேன்… அதிமுகவினருக்கு சசிகலா திடீர் கடிதம்…

சுருக்கம்

கட்சி நஞ்சாவதை ஒரு நொடி கூட பொறுக்க முடியாது என்று அதிமுகவினருக்கு சசிகலா திடீர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை: கட்சி நஞ்சாவதை ஒரு நொடி கூட பொறுக்க முடியாது என்று அதிமுகவினருக்கு சசிகலா திடீர் கடிதம் எழுதி உள்ளார்.

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினர். தி நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் கல்வெட்டு ஒன்றையும் அவர் திறந்து வைக்க, அதில் பொது செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிமுகவினருக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அதிமுக பொது செயலாளர் என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதம் விவரம் வருமாறு:

இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கம் ஆகட்டும். நாளை நாள் நமக்காக ஆகட்டும். நம் நற்பணிகளால் தமிழ் சமுகம் மீள் உயிர் பெறட்டும். அதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில் எம்ஜிஆர் கொண்ட கொள்கைகளை பின்பற்றி மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம்.

கரம் கோர்ப்போம், பகை வெல்வோம், ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அதிமுக நாடு ஆண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், நானிருக்கிறேன் என்பதை விட நாமிருக்கிறோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம். தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்கான பயணிப்போம்.

சங்கமிப்போம், சாதிப்போம். கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப்பயணத்தை, தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்று கூறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!