ஊழல் நடக்கும்… ஐ’யம் வெய்ட்டிங்… செந்தில் பாலாஜியை டார்கெட் செய்யும் அண்ணாமலை

Published : Oct 19, 2021, 07:11 PM IST
ஊழல் நடக்கும்… ஐ’யம் வெய்ட்டிங்… செந்தில் பாலாஜியை டார்கெட் செய்யும் அண்ணாமலை

சுருக்கம்

திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ஊழல் நடக்கும், ஆதாரத்துக்காக காத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ஊழல் நடக்கும், ஆதாரத்துக்காக காத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தமிழ்நாடு மின்வாரியத்தில் எடுக்க போகிறது. நட்டத்தில் இருக்கும் அந்த நிறுவனம் 4000 முதல் 5000 கோடி கொள்முதல் பெற உள்ளது.

திமுக பிரமுகர் அந்த நிறுவனத்தை வாங்கி, கொள்முதல் செய்ய உள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் லாபம் அடைய முயற்சிகள் நடக்கின்றன. அது எந்த நிறுவனம் என்று சொல்லமாட்டேன்.

ஊழல் என்பது திமுகவுக்கு கைவந்த கலை. ஊழல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவோம். நான் எச்சரிக்கிறேன். 2006 முதல் 2011ம் ஆண்டு போல திமுக இருக்காது என்று நம்புகிறேன். வேறு வழியில்லை என்னும் பட்சத்தில் ஆவணங்களை வெளியிடுவோம்.

மின்துறை அமைச்சர், மின்துறை அதிகாரிகளுக்கு நான் இதை எச்சரிக்கையாகவே கூறுகிறேன் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!