எம்ஜிஆரை விட நல்லாட்சியை கொடுத்தவர் எடப்பாடியார்.. அட்ராசிட்டி செய்யும் அர்ஜூன் சம்பத்..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 6:55 PM IST
Highlights

குடும்பத்தை கெடுக்கும், மதக் கலவரத்தை தூண்டும், சாதியை சொல்லி இழிவு படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும். கமல் நடிகராக இருக்கும் போது செய்தது சரி. ஆனால், தற்போது கட்சித் தலைவரான பிறகும் இதையே செய்து கொண்டிருக்கிறார். 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத்;- குடும்பத்தை கெடுக்கும், மதக் கலவரத்தை தூண்டும், சாதியை சொல்லி இழிவு படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும். கமல் நடிகராக இருக்கும் போது செய்தது சரி. ஆனால், தற்போது கட்சித் தலைவரான பிறகும் இதையே செய்து கொண்டிருக்கிறார். மேலும் இந்திய, தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியை தடைசெய்யவேண்டும் என ஆவேசமாக கூறினார். 

மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என கூறினார். 

இதுவரைக்கும் வந்த முதலமைச்சர்களிலேயே அண்ணா, கலைஞர், ஜெயலலிதா ஏன் எம்ஜிஆரை விட தலை சிறந்த முதல்வராக நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என புகழ்ந்து பேசினார். எம்ஜிஆர் ஆட்சியில் கூட ஊழல், விமர்சனங்கள் இருந்தது. ஆனால், எடப்பாடி ஆட்சி ஏழை எளிய மக்களின் ஆட்சியாக இருந்தது என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

click me!