சசிகலா தேவையில்லாதவர்... அவரைப்பற்றி பேசக்கூடாது... அதிமுக அமைச்சர் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2021, 5:33 PM IST
Highlights

 சசிகலாவின் விடுதலை உறுதியானதும் தென் மாவட்டங்களில் இரண்டு முக்கியமான சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சசிகலா ஏற்கனவே தேதி கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. 

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சசிகலா அடுத்து யாருடைய காரில் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது சமூகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டனர். அதிமுக, அமமுகவினரும் தொண்டர்களை சந்திக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு சசிகலாவை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சசிகலாவின் விடுதலை உறுதியானதும் தென் மாவட்டங்களில் இரண்டு முக்கியமான சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சசிகலா ஏற்கனவே தேதி கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளார். தஞ்சை சென்று தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். 

சசிகலா வந்தால் அதிமுகவில் பூகம்பமே வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. ஆனால், சசிகலா சென்னை வந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒரு அதிமுக எம்.எல்.ஏ கூட அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை. அதிரி புதிரியாக சென்னை வந்தடைந்த சசிகலா, தற்போது வரையில் மௌனம் காக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு சசிகலா தனது வேலையே ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், சசிகலா வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க அதிமுக அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, தேவையில்லாதவர்கள் பற்றி பேச தேவை இல்லை என்பதால் யாரும் அவரை பற்றி பேசுவதில்லை என அமைச்சர் பதிலளித்தார்.

தொடர்ந்து ஸ்டாலினுக்கு வெற்று எனத்தான் தெரியும் என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி செல்வதாக கூறினார். மேலும், தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறியதை முதல்வர் வெற்றியிடமாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

click me!