
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது என தமிழக பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர், ’’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடியிசம் தலைதூக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இதனால், திமுக வெற்றி பெறாது.
அதிமுகவுடனான பா.ஜ.க., கூட்டணி தொடரும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடும், இம்முறை பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்வார்கள். ராகுல் காந்தி செல்லும் மாநிலங்களில் எல்லாம் தோல்வி தான் கிடைத்து வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.