திமுகவோட B டீம் தான் சசிகலா.. அதனால் தான் வழக்கே போடவில்லை.. போட்டு தாக்கும் ஜெயக்குமார்.!

By vinoth kumarFirst Published Jun 10, 2022, 6:25 AM IST
Highlights

அதிமுகவில் இல்லாத சசிகலா கழகப் பொதுச்செயலாளர் என்று லெட்டர் பேடு போடுவதும், கழகக் கொடி ஏற்றுவதும் மிகவும் சட்டவிரோதமானது. சக்தி வாய்ந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டவர்.

அதிமுகவில் இல்லாத சசிகலா கழகப் பொதுச்செயலாளர் என்று லெட்டர் பேடு போடுவதும், கழகக் கொடி ஏற்றுவதும் மிகவும் சட்டவிரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கொடியையும், பொதுச்செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;-அதிமுகவில் இல்லாத சசிகலா கழகப் பொதுச்செயலாளர் என்று லெட்டர் பேடு போடுவதும், கழகக் கொடி ஏற்றுவதும் மிகவும் சட்டவிரோதமானது. சக்தி வாய்ந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டவர்.

பொதுக்குழுவால் நீக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் சசிகலாவின் மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கட்சிக்காரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்படுவது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல. சட்டத்தை மதிக்காமல், கடந்த ஆண்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென்று கல்வெட்டை திறந்து, கழக கொடியை ஏற்றியது தொடர்பாக என்னுடைய தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை காவல் ஆணையரிடம் மாம்பலம் போலீசார் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளேன். திமுக அரசு சசிகலாவுக்கு ஆதரவாக, B Teamஆக செயல்பட்டு வருகிறார். 2021ஆம் ஆண்டு அளித்த மனு மீது இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகப்பெரிய இயக்கம்.

இந்த இயக்கத்தின் சட்ட திட்டத்தை எல்லாம் அளித்தும், நீதிமன்ற தீர்ப்பை அளித்தும், இவர்கள் செய்வது முழுக்க முழுக்க சட்ட விரோதம் என்று குறிப்பிட்டும் கூட எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம் இந்த திமுக அரசுக்கு. காவல்துறைக்கு என்ன தயக்கம். வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்துள்ளோம் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!