'ஜெயிலில் இருந்தாலும் லகானை கையில் வைத்திருக்கும் சசிகலா...' அவர் கையெழுத்திடாமல் யாரும் வேட்பாளராக முடியாது

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
'ஜெயிலில் இருந்தாலும் லகானை கையில் வைத்திருக்கும் சசிகலா...' அவர் கையெழுத்திடாமல் யாரும் வேட்பாளராக முடியாது

சுருக்கம்

sasikala in parappana agrahara prison

அதிமுக ஆட்சிமன்றக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தொடர்ந்து அவர் கையிலே நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்சியின் சார்பாக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றால் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவர் வேட்பாளரது பெயரையும், கட்சியின் சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். 

அந்தவகையில்  ஆட்சிமன்றக் குழுத் தலைவர் என்ற பதவி முக்கியத்துவம் பெறுகிறது.ஆட்சிமன்றக் குழுவில் முன்பு ஜெயலலிதா தலைவராக பதவி வகித்தார். தற்போது அப்பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முந்தைய ஆட்சி மன்றக் குழுவில் 

ஜெயலலிதா 

ஓ.பன்னீர்செல்வம்

இ.மதுசூதனன் 

விசாலாட்சி நெடுஞ்செழியன்

அ.தமிழ்மகன் உசேன்

பி.வேணுகோபால்

எ.ஜஸ்டின்செல்வராஜ்

ஆகிய 6 பேர் உறுப்பினராக இருந்தனர். 

புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவில் 

சசிகலா தலைவர்

கே.ஏ.செங்கோட்டையன்

டிடிவி.தினகரன் 

அ.தமிழ்மகன் உசேன்

பா.வளர்மதி

பி.வேணுகோபால்

எ.ஜஸ்டின்செல்வராஜ்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில் பழைய குழுவில் இருந்த ஜெயலலிதா மற்றும் விசாலாட்சி ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.மேலும் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் தனி அணியாகப் பிரிந்து விட்டனர்.

 

இந்த நான்கு பேருக்கு பதிலாக சசிகலா, டிடிவி, தினகரன், பா.வளர்மதி, செங்கோட்டையன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியை விட விசுவாசத்தில் முந்திவிட்டார் கே.ஏ.செங்கோட்டையன் என்பது இந்த நியமனத்தின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. 

சிறையில் கடும் மன உளைச்சலில்  இருக்கும் சசிகலாவுக்கு ஆட்சிமன்றக் குழு தலைவர் பதவி பெரும் ஆறுதலை தந்திருக்கிறதாம்...உள்ளாட்சி, சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் 6 பேரும் கையெழுத்திட்டு அங்கீகரித்த பின்னர் ஆட்சி மன்றக் குழுத் தலைவர் அதை இறுதி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பாராம். 

அந்தவகையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடிய அதிமுக வேட்பாளரையும், கட்சியின் சின்னத்தையும், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா அங்கீகரித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!