"என்னை கைவிட்டு விடாதீர்கள்”... சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் சசிகலா உருக்கம்....!!!

 
Published : Feb 11, 2017, 03:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"என்னை கைவிட்டு விடாதீர்கள்”...  சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் சசிகலா உருக்கம்....!!!

சுருக்கம்

தமிழகத்தில்,  அதிமுக  கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  பெரும்  பரபரப்பு  நிலவி வரும் நிலையில், நிலைமையை  சமாளிப்பதற்காக, சசிகலா  ஆதரவு  எம்எல்ஏக்கள் தங்கியுள்ள , கூவத்தூர் சொகுசு மாளிகைக்கு  விரைந்துள்ளார்  அதிமுக  பொதுச் செயலாளர்  சசிகலா.

சமாதானத்தில் இறங்கிய சசிகலா :

அதிமுக கட்சி  இரண்டாக  உடைந்ததால், சசிகலா  ஆதரவு  எம்எல்ஏக்கள்  ஒவ்வொருவராக,  பன்னீர்  செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீதமுள்ள  சில பல எம்எல்ஏக்களை  தனக்கு ஆதரவாகவே  வைத்துக்கொள்வதற்காக,சசிகலா  போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூர் விரைந்தார்  சசிகலா :  

பன்னீர் செல்வத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போது மற்ற எம்எல்ஏக்களை   சமாதானப்படுத்த, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள  கூவத்தூர்  சொகுசு பங்களாவுக்கு நேரடியாக சென்றுள்ளார்.

பேச்சு வார்த்தை :

இந்த ஒரு பரப்பான சூழலில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற  எதிர்பார்ப்பு  அனைவரிடமும்  ஏற்பட்டுள்ளது. சசிகலா  எம்எல்ஏக்களுடன்  பேச்சு வார்த்தை  நடத்தும்  போது,  வாக்குவாதம்  கூட  ஏற்படலாம்  என  அரசியல்  வட்டாரங்கள்  கூறுகிறது. 

மேலும்,  பொதுமக்களிடமிருந்து அதிகளவு  ஆதரவு  பன்னீர்  செல்வத்திற்கு  இருக்கும்  நிலையில்,   அந்தந்த  தொகுதி எம் எல் ஏக்களுக்கு  பொதுமக்கள் பன்னீர்   செல்வதிற்கே  ஆதரவு தெரிவிக்க   வேண்டும் என  அழுத்தம்  கொடுக்கப்பட்டு வருவதாகவும்  செய்திகள்  வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

என்னை கைவிட்டு விடாதீர்கள்.:

தற்போது சசிகலா ஆதரவு  எம்எல்ஏக்களும், எங்கே  பன்னீர்  செல்வம்  அணிக்கு  சென்று விடுவார்களோ  என  கை பிசைந்து நிற்கும்  சசிகலா, “ என்னை கைவிட்டு விடாதீர்கள்  என சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் உருக்கமாக  பேசுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு