
நீதிமன்றத்தில் சரணடைய விமானத்தில் கூட போக முடியாத நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கார் மூலம் சாலை வழியாக பெங்களூருவுக்கு செல்ல வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சசிகலா, தனக்கு உடல்நிலை சரியில்லை. நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது அவகாச கோரிக்கையை நிராகரித்தது. மேலும், உடனடியாக , பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சசிகலா இன்று மாலைக்குள், பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது கைது நடவடிக்கை தொடரும் என பெங்களூர் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
சசிகலா முதலில் விமானம் மூலம் பெங்களூர் செல்வார் என கூறப்பட்டது. பெங்களூருவில் விமான கண்காட்சி நடப்பதால் விமானத்தில் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால தற்போதுஅவர் கார் மூலம் சாலை வழியாக செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து இன்னும் சற்று நேரத்தில், சசிகலா புறப்படுவார் என அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர். 350 கிலோ மீட்டர் தூரத்தை சாலை வழியாக ஜெயலலிதாவின் பிராடோ காரில் செல்கிறார். அவருடன் நவநீதகிருஷ்ணன் , டி.டி.தினகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செல்ல உள்ளனர்.