கொரோனாவில் மீண்ட சசிகலா டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை முன்பு குவிந்த அமமுகவினர்... இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

Published : Jan 31, 2021, 11:50 AM IST
கொரோனாவில் மீண்ட சசிகலா டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை முன்பு குவிந்த அமமுகவினர்... இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

சுருக்கம்

கொரோனா பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனை வளாகம் முன்பு அமமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

கொரோனா பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனை வளாகம் முன்பு அமமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்;- இன்றுடன் சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. செயற்கை சுவாசமின்றி சுவாசித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், சசிகலா டிஸ்சார்ஜ் ஆகலாம் என பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனை வளாகம் முன்பு அமமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆனால்,  7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சசிகலாவின் நலன் கருதி தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில நாட்கள் பெங்களூருவில் ஓய்வெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!