BREAKING சூடுபிடித்த தமிழக சட்டப்பேரவை தேர்தல்.. பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

Published : Jan 31, 2021, 10:53 AM ISTUpdated : Jan 31, 2021, 10:54 AM IST
BREAKING சூடுபிடித்த தமிழக சட்டப்பேரவை தேர்தல்.. பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

சுருக்கம்

பிப்ரவரி 14ம் தேதி மெட்ரோ ரயில் விவரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 

பிப்ரவரி 14ம் தேதி மெட்ரோ ரயில் விவரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 

கடந்த 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் சந்திப்பின் போது வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல், கல்லணை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் தொடங்கி வைக்க தமிழகம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் ஏற்கனவே இந்த தகவலை உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்  உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்களை நேரடியாக தமிழகம் வந்து தொடங்கி வைக்கிறார். 

பின்னர், தமிழக பாஜக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், பல்வேறு முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பிரதமர் மோடி முதன் முறையாக தமிழகம் வருகிறார்.இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தமிழகம் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!