சசிகலா திடீர் உடல்நலக்குறைவுக்கு பின்னால் மர்மம்... பகீர் கிளப்பும் வழக்கறிஞர் ராஜராமன்..!

By vinoth kumarFirst Published Jan 23, 2021, 12:34 PM IST
Highlights

சசிகலாவின் கொரோனா சோதனை முடிவு குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வழக்கறிஞர் ராஜராமன் சந்தேகம் எழுப்பியுள்ளார். 

சசிகலாவின் கொரோனா சோதனை முடிவு குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வழக்கறிஞர் ராஜராமன் சந்தேகம் எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக வழக்கறிஞர் ராஜராமன் கூறுகையில்;- சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. சிறையில் கொரோனா நோயாளிகள் இல்லை. மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்தபோதும் அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு வாரமாக ஏற்பாடு செய்யவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே சசிகலா மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஸ்கேன் வசதி, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் சசிகலாவை அனுமதித்துள்ளனர். சசிகலாவின் விருப்பத்திற்கு இணங்க தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை.

குறிப்பாக சிறைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தை தருகிறது. சிறைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தக்கோரி கர்நாடக உள்துறை செயலருக்கு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

click me!