
சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் வழங்கியதைத் தொடர்ந்து சசிகலா சென்னை வருகிறார்.
கணவர் நடராஜனை பார்ப்பதற்காகவே பரோல் கேட்டு வருவதாக தெரிவித்தாலும் கட்சிப் பிரச்னைகளை தீர்க்கும் நோக்கிலே சசிகலா பரோலில் வருவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
சசிகலா சென்னைக்கு வந்ததும் சில அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் அவரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா சென்னைக்கு வரும் நிலையில், அமைச்சர் தங்கமணி ஏற்கனவே டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லிக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா சென்னைக்கு வரும் நிலையில், முக்கிய அமைச்சர்கள் சென்னையை காலிசெய்து டெல்லிக்கு சென்றுள்ளனர்.
சசிகலா சென்னை வருவதால அமைச்சர்கள் டெல்லி செல்லவில்லை எனவும் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெறுவதால் சின்னத்தை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக டெல்லி சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ.. ஆக மொத்தத்தில் சசி சென்னையில் கால் வைக்கும்போது பன்னீர்செல்வம் இங்கு இல்லை..